பொதுவாக நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்து பெரிய நடிகையாகிவிட்டால் அடுத்து அந்த நடிகைகள், குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று அந்த நடிகர், இந்த நடிகர் என்று ஒரு லிஸ்ட் போடுவார்கள். அந்தவகையில் ஏற்கனவே கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்த அசின், மீண்டும் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். டைரக்டர் ஷங்கர் மீண்டும் கமலை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும், அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அசின் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அசின் கூறியதாவது, இதுபோன்ற செய்தி வெறும் யூகம் தான். பட விழாக்களில் ஷங்கரை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். அப்போது இருவரும் பல விஷயங்களை பேசியிருக்கிறோம். இதுதவிர பேஸ்புக்கிலும் நாங்கள் பேசிக்கொள்வோம். மற்றபடி கமல் ஜோடியாக நடிப்பது பற்றி என்னிடம் அவர் எதுவும் பேசியதில்லை. ஒருவேளை அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் கமலுக்கு ஜோடியாக நிச்சயமாக நடிப்பேன், மறுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.