விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் புதிய படம் விஸ்வரூபம். இப்படத்தின் பட்ஜெட் 100 கோடி. இப்படத்தை ஹாலிவுட்டில் வெளியிட முயற்சி செய்துகொண்டிருக்கிறார் கமல். இதற்காக வார்னர் பிரதர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
உலகளவில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் விஸ்வரூபம் படத்தின் கதை. இப்படத்தில் ஆன்ட்ரியாவுக்கு முக்கிய வேடம் கொடுத்திருக்கும் கமல்ஹாசன், படத்தில் இடம்பெறும் பெண் பாத்திரங்களைத் தேர்வு செய்யும் முக்கிய பொறுப்பையும் அவரிடமே வழங்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.