இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம்'விஸ்வரூபம்'. கமல்,ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்க, கமல் இயக்கி வருகிறார். ஷங்கர் இஷான் லாய் இசையமைத்து வருகிறார்கள்.
இப்படத்தினை பற்றிய சில தகவல் துளிகள்:
* விஸ்வரூபம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை.
* இதுவரை கமல் நடித்த படங்கள் எல்லாவற்றையும் விட அதிக பொருட்செலவில் தயாராகும் படம் 'விஸ்வரூபம்'.
* ஜோர்டன் நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு BLACK HAWK, COBRA, CHINOOK ஆகிய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
* அமெரிக்க ராணுவப்படையை படம் பிடிக்க அனுமதி இல்லாததால்,இப்படத்தில் துணை நடிகர்களை வைத்து நகலாக அமெரிக்க ராணுவப்படையை தயார் செய்திருக்கிறார்கள்.
* நியூயார்க் நகரில் ஒரு தெருவில் காட்சி எடுக்க வேண்டும் என்றால் அத்தெருவையே மூடிவிட்டு அனுமதி அளிப்பார்கள். அங்கு நடந்து செல்லும் ஆட்கள் கூட படப்பிடிப்பு ஆட்களாக தான் இருக்க வேண்டும். அப்படி படப்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு பிரம்மாண்டமான கார் சேஸ் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.
* கமல் இப்படத்தில் கதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ் நடனம் அமைக்க, கமல் படத்தில் கதக் நடனம் ஆடி இருக்கிறார்.
* வைரமுத்து எழுதி கொடுத்த ஒரு பாடல் கமல் மனதை கவர்ந்து விட,இத்தாலியில் உள்ள Mount Etna எரிமலைக் குழம்பில் செய்த பேனா ஒன்றை பரிசாக கொடுத்து இருக்கிறார்.