விஸ்வரூபம் படத்தின் தயாரிப்புப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார் கமல்ஹாஸன்.
இந்தப் படத்தை ஆரம்பத்தில் இயக்குவதாக இருந்தவர் செல்வராகவன். எல்லாம் தயாராக இருந்த நிலையில் தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் செல்வராகவன்.
இயக்குநர் பொறுப்பை கமல் ஹாஸன் ஏற்றார். இப்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்ற பொறுப்பையும் தானே ஏற்றுள்ளார் கமல்.
இந்தப் படத்தை முதலில் தயாரித்தது பிவிபி சினிமாஸ் பொட்லூரி பிரசாத். இவர் செல்வராகவனுக்கு நெருக்கமானவரும் கூட. இவரை விஸ்வரூபம் படத் தயாரிப்பாளராக்கியவரே செல்வராகவன்தான்.
அதனால் தயாரிப்பாளர் விலைகளின் பின்னணியில் செல்வராகவன் தலையீடு இருக்குமோ என்று பேசப்படுகிறது. எல்லாம் இன்னு கொஞ்ச நாளில் உண்மை தெரிந்து விடும்.
இப்போது பிரசாத்தும் விலகிக் கொள்ள, கமல்ஹாஸன் தயாரிப்பாளராகிவிட்டார்.