Monday, 7 November 2011

கமல் என்ற சகாப்தம்... சக கலைஞர்களின் வாழ்த்து மழை!

,
 
 
இன்று பிறந்த நாள் காணும் கமல் ஹாஸனுக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.
 
களத்தூர் கண்ணம்மாவில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் உலக தமிழ் நாயகன் கமல்ஹாஸனுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துத் தெரிவித்தார்.
 
அவருடன் மேலும் பல பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவர்கள் விவரம்:
 
சரத்குமார் - தலைவர், திரைப்பட நடிகர் சங்கம்
 
பத்மஸ்ரீ கமல் ஹாஸன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழர்களுக்கு மிகவும் பெருமையைத் தந்துள்ள மாபெரும் கலைஞர் அவர். இன்னும் பல்லாண்டுகள் திரையுலகில் புதுப்புது சாதனைப் படைக்க வாழ்த்துகிறேன்.
 
ஏ ஆர் முருகதாஸ் - இயக்குநர்
 
கமல் சார் பற்றி பேசும்போதெல்லாம் நான் பெருமையாக உணர்வேன். திறமையான, சாதனைப் படைத்த கலைஞர் என்பதையும் தாண்டி, ஒரு தமிழராக நம்மை நெஞ்சு நிமிர வைத்த நாயகன் அவர். அவர் காலத்தில் நான் ஒரு தமிழ் சினிமா இயக்குநராக இருந்தேன் என்பதே பெருமை. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வது மகிழ்ச்சியான தருணம்!
 
சூர்யா - நடிகர்
 
கமல் சார் பற்றி நான் சொல்லி தெரியும் நிலை இல்லை. கலை உலகின் பிதாமகன் அவர்தான். அவரைப் பார்த்து நடிக்கக் கற்றுக் கொண்டவன். அவருக்கு வாழ்த்து சொல்லும் அளவு நான் பெரிய ஆள் இல்லை. ஆனால் அவரை வணங்கும் தகுதி உள்ளது. கமல் சார்... உங்கள் மூலம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
 
அசின் - நடிகை
 
கமல் சாருக்கு எனது மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். என் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய லட்சியம் நிறைவேறியது. அதற்கு காரணம் நம்ம கமல் சார்தான். ஆம். தசாவதாரத்தில் அவருடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. நன்றி சார்.



0 comments to “கமல் என்ற சகாப்தம்... சக கலைஞர்களின் வாழ்த்து மழை!”

Post a Comment

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates