நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 57வது பிறந்தாளை வழக்கம் போல எளிமையாக கொண்டாடுகிறார். கமல் பிறந்தாளையொட்டி அவரது நற்பணி மன்றத்தினர் ரத்ததானம், உடல் உறுப்பு தானம் செய்தனர்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 57வது பிறந்த நாளாகும். தனது பிறந்த நாளின்போது நற்பணிகள் செய்யுமாறு கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தியுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நற்பணிகளை செய்துவருகின்றனர் ரசிகர்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டும் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் ரத்ததானம், உடல் உறுப்புதானம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று ரத்தானம் உடல் உறுப்புதானம் செய்தனர்.