மும்பையிலிருந்து கோடம்பாக்கத்தை நோக்கி மையம் கொள்ளக்கிளம்பும் புதிய புயலின் பெயர் இஷா ஷெர்வானி.நாட்டியத்தின் சகல அயிட்டங்களிலும் சக்கரவர்த்தினியான இஷா, கே.வி.ஆனந்த்-சூர்யா காம்பினேசனில் உருவாகும் 'மாற்றானில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.இப்படி ஒரு பாடலுக்கு ஆட இஷாவை ஒப்புக்கொள்ள வைக்க கே.வி.ஆனந்த் மும்பையில் மூன்று தினங்கள் முகாமிட்டிருந்தது தனிக்கதை.
அடுத்து பிஜாய் நம்பியார் இயக்கத்தில் மூன்று ஹீரோ சப்ஜெக்டான 'டேவிட்' இந்திப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் இஷா, படங்களில் நடிப்பதை விட, தனது புதுப்புது நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதில் தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்.
இதுபோன்று ஒரு நாட்டிய நாடகத்துக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதுதான், இஷாவை, கமல் தனது 'விஸ்வரூபம்' படத்துக்கு நாயகியாக நடிக்க அழைத்தாராம். ஆனால் நாட்டிய நிகழ்ச்சியை ஒரு பட வாய்ப்புக்காக எப்போதுமே தள்ளிப்போட விரும்பாத இஷா, கமல் படம் என்றும் பாராமல், 'ஸாரி அடுத்த படத்துல பார்க்கலாம்' என்று கமலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டாராம்.