நடிகை இஷா ஷர்வானி இந்தியில் நடித்த படங்கள் சுமாராக ஓடின. அவரிடம் உள்ள ஏதோவொரு திறமையை பார்த்த கமல் தான் தயாரித்து இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் படமான விஸ்வரூபத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்.
இஷா ஷர்வானிக்கு கமல் கேட்ட கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால் விஸ்வரூபம் வாய்ப்பு கைநழுவி போய்விட்டது. இதை பற்றி கேட்ட போது இஷா " கமலின் விஸ்வரூபம் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு கால்ஷீட் தான் காரணம்.
இந்த வாய்ப்பு நழுவியது வருத்தமாக இருந்தாலும், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
இஷா விகரம் நடிக்கும் பாலிவுட் படமான டேவிட்டிலும் நடிப்பதாக பேச்சு. கமலின் விஸ்வரூபம் மார்ச் 15-ம் தேதி ரிலீஸாகிறது.