கமலின் விஸ்வரூபம் படத்திலிருந்து நடிகை இஷா ஷெர்வானியும் விலகிவிட்டார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், இப்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.
கமல் இயக்கும் இந்தப் படத்தின் கதாநாயகிகள் விஷயத்தில் மட்டும் இழுபறியான நிலையே இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்காவை தேர்வு செய்தனர். கமலின் மனைவி கேரக்டரில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சோனாக்ஷி திடீரென விலகி விட்டார்.
அவருக்கு பதில் தீபிகா படுகோனே, சோனம்கபூர், வித்யாபாலன், சமீராரெட்டி, அனுஷ்கா என பலரை பரிசீலித்து இறுதியாக பூஜாகுமார் தேர்வானார். இந்த நிமிடம் வரை அவர்தான் ஹீரோயின்.
இரண்டாவது நாயகியாக இஷா ஷெர்வானி நடிக்கவிருந்தார். இந்த நிலையில் இஷா ஷெர்வானி திடீரென படத்தில் இருந்து விலகி விட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "விஸ்வரூபம்" படத்தில் கமலுடன் நடிக்க அவர் அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினர். கமலுடன் நடிக்க போவதை நினைத்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் அப்படத்தில் நடிக்க தேதி ஒத்து வரவில்லை. எனவே அதில் இருந்து விலகி விட்டேன்," என்றார்.