Thursday, 26 January 2012

'விஸ்வரூபம்'.. அடுத்து ?

,
கமல் இப்போது இயக்கி , நடித்து , தயாரித்து வரும் ' விஸ்வரூபம் '
படப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தினை அடுத்து கமல்
எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள்
வெளியாகி வந்தன.
' விஸ்வரூபம் ' படத்தினை அடுத்து தமிழ் , இந்தி என இரு மொழிகளில் தயாராக
இருக்கும் ' அமர் ஹெய்ன் ' என்னும் படத்தில் நடிக்க இருக்கிறாராம் கமல்.
இப்படத்தையும் அவரே இயக்கி நடிக்கவுள்ளார்.
இந்தி பதிப்பிற்கான தலைப்பு ' அமர் ஹெய்ன் ' வைக்கப்பட்டுள்ளது. தமிழ்
பதிப்பிற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை.
இப்படம் குறித்து கமல் " இந்த படத்திற்கான கதையை இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னரே தயார் செய்துவிட்டேன். ஆனால் அப்போது அந்த படத்தை எடுக்க சரியான
தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இப்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது. '
விஸ்வரூபம் ' படத்தை முடித்த பின்னர் இப்படத்தினை இயக்கவுள்ளேன் " என்று
தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் தலைவிரித்தாடும் ஊழலுக்கு எதிரான பதிவாக இப்படம்
அமையும் என சொல்லப்படுகிறது.

0 comments to “'விஸ்வரூபம்'.. அடுத்து ?”

Post a Comment

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates