கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதாவை இழிவாக சித்தரித்தாக குற்றம்சாட்டப்பட்ட
நக்கீரன் பத்திரிகை மீது
முதல்வர் தரப்பினால், உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு
தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று,
நக்கீரன் பத்திரிகையில் முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டு வருத்தம்
தெரிவித்தது அந்த வார இதழ்.
இதேபோல முன்னணி ஹீரோ தனுஷுடன் ,கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனைஇணைத்து
செய்தி வெளியிட்டதற்காக மற்றுமொரு முன்னணி தமிழ் வார இதழான குமுதத்திற்கு
வக்கீல் நோட்டீஸ் அனுப்பிருந்தார் பாதிக்கப்பட்ட ஸ்ருதி ஹாசன்.
தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கி வரும் 3 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து
முடித்திருகிறார் ஸ்ருதி. படத்தில் நடிக்கும்போது தனுஷுக்கும்
ஸ்ருதிக்கும் காதல் அரும்பியதாகவும், இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் ,
இதனால் ரஜினி வீட்டில் ஸ்ருதி மீது கோபமாக இருப்பதாகவும் கவர் ஸ்டோரியாக
வெளிட்டது அந்த வார இதழ்.
இந்த செய்தியை மறுநாள் ஆங்கிலப் பத்திரிகையும், மேலு பல காமர்ஷியல்
இணையதளங்களும் அதிக தடவை மீள்பிரசுரித்தன. இந்த செய்திகளை முதலில்
ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாஸன் இருவரும் உடனடியாக மறுத்தனர்.
ஆனால் அப்பா வழியில் நியாமான கோபத்துக்கு உள்ளான ஸ்ருதிஹாசன் அந்த வார
இதழுக்கு விளக்கம் கேட்டு நேற்று முந்தினம் வக்கீல் நோட்டீஸ்
அனுப்பியிருகிறார்.
இந்த வக்கீல் நோட்டீஸைப் பெற்றுக்கொண்ட குமுதம் வார இதழ், உடனடியாக தனது
வழக்குரைஞரை அழைத்து ஆலோசித்ததோடு, ஸ்ருதிஹாசனுக்குவருத்தம் தெரிவித்து
தனிக் கடிதம் அனுப்பியிருப்பதாக நமக்கு தகவல் கிடைக்கிறது.
இந்தவருத்தத்தை ஸ்ருதி ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், நக்கீரன் போன்று தனது
வெளியிட்டு பிரதியில் வருத்தம்கேட்கலாம் என்கிறார்கள் சம்பந்தப்பட்ட
பத்திரிகை அலுவலக வட்டாரத்தில்..!
Internet Download Manager 6.21 serial key
-
Internet Download Manager 6.21 free download with serial key. Internet
Download Manager is the very powerful application to force download the any
size of ...
10 years ago