Sunday, 15 January 2012

தலையும் உலக நாயகனும் இணையும் படம் – கோடம்பாக்கத்தில் பரபரப்பு

,
கூட்டல் கழித்தல் மாதிரிதான் கோடம்பாக்கத்தில் நடைபெறும் முட்டல்
மோதல்களும்! தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் உச்சக்கட்ட மிர்ச்சியாக
இருந்தார்கள் அப்படத்தின் ஹீரோவான கமலும், தயாரிப்பாளரான ஆஸ்கர்
ரவிச்சந்திரனும் படத்தின் ரிலீஸ் திகதியை கூட பேப்பர் விளம்பரத்தை
பார்த்தே அறிந்து கொள்ள முடிந்தது கமலால். அப்படியெல்லாம் தள்ளி நின்ற
இருவரும் இப்போது மீண்டும் கை கோர்த்திருக்கிறார்கள்.
இந்த கூட்டணி கூண்டுக்குள் அடைக்கலமாகியிருப்பது கமல் மட்டுமல்ல, ஒரு
காலத்தில் ஆஸ்கர் பிலிம்சில் அடுத்தடுத்த படங்களில் நடித்த
அஜீத்தும்தான். அந்த நேரத்தில் அஜீத்துக்கும் ஆஸ்கருக்கும் கூட மயிரிழை
அளவுக்கு மனக்கசப்பு இருந்தது.
ஒரு சின்ன புன்னகை எல்லாவற்றையும் வென்று விடுமல்லவா? இப்போது மீண்டும்
அந்த அதிசயம் நிகழப்போவதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கமல் நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்தில் ஒரு முக்கியமான ரோலில்
அஜீத்தையும் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ஆஸ்கர்
ரவிச்சந்திரன். இவரும் ஆகட்டும்பார்க்கலாம்… என்று கூறியிருக்கிறாராம்.

0 comments to “தலையும் உலக நாயகனும் இணையும் படம் – கோடம்பாக்கத்தில் பரபரப்பு”

Post a Comment

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates