நடிகர் கமலஹாஸனை வைத்து படம் இயக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன் எனக் கூறியிருக்கிறாராம் அமீர். தற்போது விஸ்வரூபம் படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் கமலஹாஸன் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் இருப்பதால் அடுத்ததாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக இருக்கிறார்.
இந்நிலையில் கமலஹாஸனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன் என்று அமீர் கூறியிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
அமீர் தற்போது ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ஆதிபகவன் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படத்தில் சல்மான் கான், ஜாக்கி சான் ஆகியோர் நடிக்கிறார்கள் என வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லையாம்.
அப்டீன்னா அது பேரு புரளி தானே?