நடிகை மனோரமாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் கமல்.
தனது வீட்டு குளியலறையில் வழுக்கி வந்த மனோரமாவுக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று அவருககு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனைக்கு நடிகர் கமல் சென்று நலம் விசாரித்தார். இவர் தவிர நடிகை அனுஷ்கா உள்பட பலரும் மனோரமாவை சந்தித்து வருகின்றனர்.