கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கப்போகிறார் நடிகர் ராகுல் போஸ். கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் விஸ்வரூபம், ஹாலிவுட் பாணியில் தயாராகிறது. இந்த படம் கமலுக்கு இன்னொரு மைல் கல்லாக இருக்கும் என கூறப்படும் இப்படத்தின் முதல் கட்ட சூட்டிங் மாமல்லபுரம் பகுதியில் நடந்து முடிந்துள்ளது. படத்தில் நாயகனுக்கு இணையான பவர்ஃபுல் வேடம் வில்லனுக்கு. அதற்கு சரியான ஆள் வேண்டுமே என யோசித்த கமல், கடைசியில் ராகுல் போஸ் என்பவரை முடிவு செய்திருக்கிறார். இவர் "மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிப்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் ராகுல் போஸ், கமல் சாரே என்னை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாத அளவுக்கு விஸ்வரூபத்தின் வெற்றிக்கு பாடுபடுவேன், என்று கூறியுள்ளார்.