தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் ' 3 '. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடிய 'Why this கொலவெறி ' பாடல் உலகெங்கிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலைத் தொடர்ந்து, இப்படத்தின் இசை வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு நிலவியது.
' 3 ' படத்தில் ரஜினியின் மகளும், கமலின் மகளும் ஒன்றிணைவதால், இப்படத்தின் இசையை ரஜினியோ கமலோ வெளியிடக்கூடும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவ்விருவரும் இசையை வெளியிடப் போவதில்லை எனத் தெரிகிறது.
இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 23-ம் தேதி மாலை 7 மணிக்கு St.George School மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ஐஸ்வர்யா, ' 3 ' இசை வெளியீடு வழக்கமான இசை வெளியீடு போலில்லாமல் வித்யாசமான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறாராம். எனவே, நிகழ்ச்சி பற்றிய விவரங்களை வெளியிடாமல் இருக்கிறார்கள்.